நகரத்தாருக்கே உரித்தான வீட்டுப் பொருள்கள் குறித்த கலைச் சொற்கள்.
குறிச்சி - சாய்வு நாற்காலி
ஒலுகு - சாய்ந்துகொள்ளும் பெரிய தலையணை
திண்டு - நீளமான தலையணை
கொட்டான் - ஓலையில் செய்யப்பட்ட சிறிய பெட்டி
வக்கூடு - கை பிடியோடு கூடிய ஓலை பெட்டி
பழப்பெட்டி - நடுத்தர அளவு ஓலைப் பெட்டி
கடகாம் - பெரிய அளவிலான ஓலைப் பெட்டி
வட்டி - உணவு உண்ணப் பயன் படும் தட்டு
கிண்ணி - கறி வகைகள் வைத்துக்கொள்ளும் சிறிய தட்டு
கும்ப - உணவு உண்ணப் பயன் படும் கலம்
போகிணி - தண்ணீர் முகக்கும் பத்திரம் (டம்ளர்)
சலிக்கி சிலாத்தி - பொருள்களைச் சலிக்கப் பயன் படும் வலைத் தட்டு
சொளகு - சுளகு - புடைக்கும் ஓலைத் தட்டு (முறம்)
பணிக்கம் - எச்சில் துப்பும் கிண்ணம்
படுதா - திரை
மரவை - மரத்தட்டு
தடுக்கு - உட்காரப் பயன் படும் ஓலை அல்லது துணி இருக்கை
பாதாள கரண்டி - கிணற்றில் விழுந்த பொருள்களைத் தேடி எடுக்கப் பயன் படுத்தும் இரும்புக் கருவி
குந்தாணி - உரல்
No comments:
Post a Comment