Sunday, April 10, 2011

நகரத்தாருக்கே உரித்தான வீட்டுப் பொருள்கள் குறித்த கலைச் சொற்கள்.

நகரத்தாருக்கே உரித்தான வீட்டுப் பொருள்கள் குறித்த கலைச் சொற்கள்.

குறிச்சி - சாய்வு நாற்காலி
ஒலுகு - சாய்ந்துகொள்ளும் பெரிய தலையணை
திண்டு - நீளமான தலையணை 
கொட்டான் - ஓலையில் செய்யப்பட்ட சிறிய பெட்டி 
வக்கூடு - கை பிடியோடு கூடிய ஓலை பெட்டி 
பழப்பெட்டி - நடுத்தர அளவு ஓலைப் பெட்டி 
கடகாம் - பெரிய அளவிலான ஓலைப் பெட்டி
வட்டி - உணவு உண்ணப் பயன் படும் தட்டு
கிண்ணி - கறி வகைகள் வைத்துக்கொள்ளும் சிறிய தட்டு 
கும்ப - உணவு உண்ணப் பயன் படும் கலம்
போகிணி - தண்ணீர் முகக்கும் பத்திரம் (டம்ளர்)
சலிக்கி சிலாத்தி - பொருள்களைச் சலிக்கப் பயன் படும் வலைத் தட்டு 
சொளகு - சுளகு - புடைக்கும் ஓலைத் தட்டு (முறம்)
பணிக்கம் - எச்சில் துப்பும் கிண்ணம் 
படுதா - திரை 
மரவை - மரத்தட்டு 
தடுக்கு - உட்காரப் பயன் படும் ஓலை அல்லது துணி இருக்கை
பாதாள கரண்டி - கிணற்றில் விழுந்த பொருள்களைத் தேடி எடுக்கப் பயன் படுத்தும் இரும்புக் கருவி 
குந்தாணி - உரல் 

Monday, April 4, 2011

அ.   பொய் சொல்லும் நாடு எது ?

ஆ.  ஓடாத மான் எது ?

இ.   கையில் TUBE  லைட் வைத்திருக்கும் பாடகர் என்ன செய்வார் ?

ஈ.   யாருமே தங்க முடியாத சத்திரம் எது ?

உ.   எந்த வாத்திய கருவிக்கு வாய் இறுக்கிறது ?

ஊ.  பெண்களுக்கு பிடித்த காரம் எது ?

எ.    ஊரெல்லாம் சுற்றுகிற சினிமா THEATRE  எது ?

ஏ.   வெட்ட பயன் படுகிற காய் எது ?

ஐ.   வழக்கு போடா முடியாத வழக்கு எது ?

ஒ.   தண்ணீரில் கல்லை போட்டால் அது ஏன் முழுகுகிறது ?