நிறைமணிக் காட்சி
புரட்டாசிமாதம் பௌர்ணமிநாளில் நிறைமணிக்காட்சியாக சிவாலயங்களில்
கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணம் ஒரு முறைதேவேந்திரன்அணைத்து
உலகங்களையும் சுற்றி வந்து பார்த்தபொழுது பூலோகம் வறட்சியால் பாதிக்கப்
பட்டுள்ளதையும் உயிர்கள் மழை இல்லாமல் பரி தவிப்பதையும் கண்டு சிவபெருமானிடம்
சென்று சிவபெருமானின் முடியில் உள்ள கங்கையை பூமிக்கு அனுப்பும் படிவேண்டச்செல்ல,
அவ்வாறு செல்லும் பொழுது காய்கறிகள், பழங்கள், தான்னியங்கள் எல்லாவற்றையும் எடுத்து
சென்று மாலை 5.30 மணியளவில் சிறப்புப் பூஜை செய்ய அதில் முப்பத்து முக்கோடி தேவர்களும்
கலந்து கொள்ள, காய் கறிகளையும், கனிகளையும் கண்ட சிவபெருமான் மன மகிழ்ந்து கங்கையை
பூமிக்கு அனுப்பி வறட்சி நீங்கும் வண்ணம் பூமியை நீரால் நிறைத்து விட்டு வருக என கங்கையை பூமிக்கு அனுப்பிய இத்தினமே நிறை மணிக் காட்சியாக சிவாலயங்களில் கொண்டாடப் படுகிறது.
இந்நாளில் பக்தர்கள் தங்களால் இயன்ற காய்கறி, கனி வகைகள் தானியங்கள் இனிப்புகள் ஆகியவற்றை வழங்க அவை சிவபெருமான் முன் கண் காட்சியாக வைக்கப் பட்டு பூஜிக்கப்
படுகிறது.
இந்தத் தகவல் எங்கள் திருவேடீஸ்வரர் திருக்கோவில் குருக்கள் அளித்ததை உங்களுடன்
பகிர்ந்து கொண்டேன்.
ச, சித்ரா
திருவல்லிக்கேணி, சென்னை.
29.09.2012