Sunday, November 21, 2010

சொக்கபனை ஏற்றுதல்

 சொக்கபனை ஏற்றுதல்
இறையருளால் வரங்கள் பலவற்றையும் பெற்று விட்ட மகாபலிச் சக்கரவர்த்தி, உலகையே தன் 
கைப்பாவை போல எண்ணியதும், அவனை அடக்க மகாவிஷ்ணு வயோதிகர் வேடம் அணிந்து சென்று, அவனிடம் மூன்றடி மண்ணை தர்மமாகக் கேட்டதும் நாமறிந்த புராணமே.!  

அதன்படி, மகாவிஷ்ணு ஒருகாலை பூமியில் வைக்க, மற்ற இரு அடிகளுக்குக் காலைத்தூக்கி, தன் தலையில் வைக்கும்படி கூறினான் மகாபலி.  அப்படியே அவரும் வைக்க, அவன் பூமிக்குள் புதையுண்டான்.

மகாபலி அரசபதவி ஏற்ற நாள் தீபாவளி என்றாலும், தன்னை திருக்கார்த்திகை தீபத்தன்று நினைக்க வேண்டும் என்று அவன் வேண்டிக்கொண்டான்.  அதனால்தான் சிவன் மற்றும் விஷ்ணு ஆலையங்களில் திருக்கார்த்திகை தீபத்தன்று சொக்கர் பனை என்ற கூம்பு வடிவ எரியூட்டல் நிகழ்வினைச் செய்து "மகாபலி.. மகாபலி.."  என்று தங்கள் கைகளில் தீப்பந்தங்களை வைத்தபடி சுற்றிவருகின்றனர். 

தீபத்திருநாளில் நமிடம் உள்ள தீய எண்ணங்கள் சாம்பலாகி விட வேண்டும் என்று நினைத்து ஒரு தாவரப்போருளை எரியூட்டுவதே சொக்கைபனை !  கிராம புறங்களிலும் தென் மாவாட்டங்களில் சில ஊர்களிலும், அந்த சொக்கற்பனைச் சாம்பலை எடுத்து வந்து வயலில் போட்டால் நிலத்தில் உள்ள பயிர்கள் நன்றாக விளையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

நன்றி தேவதை 

கிளியைப்போல் இனிமையகப்பேசு. கொக்கு போல் மன ஒருமையுடன் இறைவனை நினை .ஆடுபோல்நன்கு மென்று சாப்பிடு. யானையைப் போன்று குளி.நயைபோன்று நன்றி உணர்வுடன் பழகு.காக்கயைப்போல் குறிப்பறிந்து கொள் தேநீயைப் போல் உழை .எறும்பைப்போல்சுறுசுறுப்பாக இரு. மனிதன் எப்படி வாழவேண்டும் "என்பதற்கு ,திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன அறிவுரை இது. நன்றி சக்தி விகடன்.