Sunday, October 3, 2010

ZHAGARATHIN SIRAPPU

படித்ததில் பிடித்தது.

கிழமைகளில் குருவின் சிறப்பான வியாழனுக்கு மட்டும் 'ழ' கரம் உண்டு.  
விடியலில் திருப்பள்ளி எழுச்சி இசைக்கும் மார்கழிக்கு மட்டுமே ழகரம் உண்டு .
வானத்தில் நம்மை வாழ வைக்கும் மழையில் உள்ளது .
தமிழ் இலக்கணத்தில் எழுத்து இலக்கணத்திற்கு மட்டுமே ழகரம் உண்டு.
மரங்களில் அதிக மணம் வீசும் தாழைக்கும் குலைத்தள்ளும் வாழைக்கும் 
ழகரம் உண்டு.  தாவர உறுப்பில் பழத்திற்கு மட்டுமே ழகரம் உண்டு.
நான்கு திசைகளில் சூரியன் தோன்றும் கிழக்கு  திசைக்கு மட்டுமே ழகரம் உண்டு.
பாதாதி கேசத்தில் விழிக்கும் கழுத்துக்கும் மட்டுமே ழகரம் உண்டு.
வீட்டுக்காவலில் தழ்பாளில் மட்டுமே ழகரம் உண்டு.  உலகில் எந்த மொழிகளிலும் 
இல்லாத ழகரம் தமிழுக்கு மட்டுமே உண்டு.  
இறுதியாக எத்தனை மங்களச் சொல் சொன்னாலும் 'வாழிய' என்ற ழகரம் உள்ள 
வாழ்துசொல்லுக்கு ஈடு இணை உண்டோ ?

No comments:

Post a Comment